இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொண்ட நட்சத்திர கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு இருக்கும் முதுகெலும்பு இந்நாட்டு அரசாங்கத்திற்கு இல்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று(04.08.2025) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் ஏற்றுக்கொண்டார்.
பௌத்த அமைச்சகம் இல்லை
22 ஆண்டுகளாக இந்த நாட்டில் திறந்தவெளி சிறைக்கைதியாக இருந்த ரொபர்ட் நொக்ஸ், தனது ஹெல மொழி புத்தகத்தில், இந்த நாட்டு மக்களின் மதமான பௌத்தம் தர்க்கரீதியானது மற்றும் அறிவுசார்ந்தது என்றும், அதை தானும் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போதைய அரசாங்கத்திற்கும் புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சருக்கும் இந்த நாடு ஒரு பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முதுகெலும்பு இல்லை.
அத்துடன், வரலாற்றில் முதல்முறையாக, நாட்டில் பௌத்த அமைச்சகமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
