Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியில் இணைந்த ரெலோ இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்

தமிழரசுக் கட்சியில் இணைந்த ரெலோ இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்

0

தமிழீழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) நீண்டகாலமாக செயற்பட்ட விந்தன் கனகரட்ணம் இலங்கை தமிழரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வு நேற்றையதினம்(10) இடம்பெற்றுள்ளது.

அவரின் மகனான தற்போதைய யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவனுமான V.K.மார்க் அன்ரனியும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் ஆயுள் கால உறுப்பினராகவும் அக்கட்சியின் இளைஞர் அணி உறுப்பினராகவும் இணைந்து கொண்டுள்ளார்.

தமிழரசுக் கட்சி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முன்னிலையில் அவரின் நல்லூர்,கல்வியங்காடு அலுவலகத்தில் வைத்து இருவருக்குமான உறுப்புரிமைகளை அவர் வழங்கி வைத்தார்.

வடக்கு மாகாணசபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, யாழ் மாநகரசபைகளில் முன்னாள் உறுப்பினராக விந்தன் கனகரட்ணம் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version