Home இலங்கை அரசியல் நாடாளுமன்றில் வெடித்த சர்ச்சை: துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள்!

நாடாளுமன்றில் வெடித்த சர்ச்சை: துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள்!

0

கடந்த சில வாரங்களாக நாடாளுமன்றத்தில் பணிபுரியும் சில பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் செய்திகள் வெளியாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மூத்த அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பெண் ஊழியர்களை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர்.

எனக்குக் கிடைத்த தகவலின்படி, சில சந்தேக நபர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு கட்டாய ஓய்வு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரிகள் அங்குள்ள பெண் ஊழியர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இந்த நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால், அது நம் அனைவரையும் பாதிக்கும். இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்கவும்.”என்றார்.  

https://www.youtube.com/embed/bS0ubvNJ0iY

NO COMMENTS

Exit mobile version