Home இலங்கை சமூகம் விஐபி பாதுகாப்பு பணியாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு விவகாரம்

விஐபி பாதுகாப்பு பணியாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு விவகாரம்

0

Courtesy: Sivaa Mayuri

விஐபி என்ற முக்கியஸ்தர்களுக்காக நியமிக்கப்பட்ட முப்படை உறுப்பினர்களுக்கான ஊக்க ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை தொடர்பான அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதன்படி, முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்புக்காக முன்னர் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாத்திரமே கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொடுப்பனவுகள் 

2024ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு பின்னர், அவர்கள் இனி இதுபோன்ற கடமைகளில் ஈடுபட மாட்டார்கள் என்பதால், அன்றைய திகதியில் அவர்களது கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.

இதற்கமைய, அவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு 2024 செப்டெம்பர் 22 வரை மட்டுமே வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்களுடன் இணைக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்வதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version