Home முக்கியச் செய்திகள் நாடாளுமன்ற தேர்தல் : மொட்டு எடுத்துள்ள அதிரடி முடிவு

நாடாளுமன்ற தேர்தல் : மொட்டு எடுத்துள்ள அதிரடி முடிவு

0

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கும் போது மாகாண சபைகள் (PC) மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் (LG) முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் 50 வயதுக்குட்பட்ட ‘இளம்’ வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மொட்டுவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள்
ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச(namal rajapaksa),

 இளம் வேட்பாளர்கள்

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கும் போது இளம் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை அளிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கூடுதலாக, 50 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் சிறப்புக் கருத்தில் கொள்ளப்படுவார்கள்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் பதவிகளில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜபக்ச தெரிவித்தார். “இந்த நியமனங்களைச் செய்வதில் இளைஞர் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்”என்றார்.

ரணிலை ஆதரித்தவர்களுக்கு கல்தா

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) ஆதரித்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே தெரிவித்திருந்தது.

விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், சில உறுப்பினர்களை கட்சிக்குள் அவர்கள் வகித்த பதவிகளில் இருந்தும் நீக்கியுள்ளது.

மொட்டுவின் மத்திய குழு விக்ரமசிங்கவை ஆதரிப்பதை விட அதன் சொந்த ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்த பின்னர், கட்சியின் வேட்பாளராக நாமல் பரிந்துரைக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், கணிசமான எண்ணிக்கையிலான மொட்டு உறுப்பினர்கள் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்தனர். இந்த உறுப்பினர்கள் பின்னர் ஒரு தனி அரசியல் கூட்டணியை உருவாக்கினர், பொதுச் செயலாளர் பதவி முன்னாள் அமைச்சரும் மொட்டுவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ரமேஷ் பத்திரனவுக்கு வழங்கப்பட்டது. 

NO COMMENTS

Exit mobile version