பதில் சட்டமா அதிபராக தற்போதைய சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க, வௌிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதால், அவர் நாடு திரும்பும் வரைக்கும் விராஜ் தயாரத்ன பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனம்
பாரிந்த ரணசிங்க பெரும்பாலும் மே மாத இறுதியில் நாடு திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதுவரை பதில் சட்ட மா அதிபர் திணைக்களம் விராஜ் தயாரத்னவின் கீழ் செயற்படும்.
விராஜ் தயாரத்ன, நேற்றைய தினம் (30) பதில் சட்ட மா அதிபராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
