Home இலங்கை சமூகம் மலேசியாவில் கல்வி கற்கும் இலங்கையர்கள் : விசா குறித்து வெளியான தகவல்

மலேசியாவில் கல்வி கற்கும் இலங்கையர்கள் : விசா குறித்து வெளியான தகவல்

0

மலேசியாவில் (Malaysia) கல்வி கற்கும் இலங்கை (Sri Lanka) மாணவர்களின்  விசா காலத்தை நான்கு வருடங்களுக்கு அதிகரித்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) மலேசியா உயர் கல்வி அமைச்சர் ஷாம்ப்ரி அப்துல் காதிரிடம் (Zambry Abdul Kadir) கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள  செந்தில் தொண்டமான் மலேசியா உயர் கல்வி அமைச்சர் ஷாம்ப்ரி அப்துல் காதிரை சந்தித்து இலங்கைக்கும் மற்றும் மலேசியாவுக்குமான கூட்டுத்திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தநிலையில், மலேசியாவில் உயர்கல்வி கற்கும் 3800 இற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் தற்போதைய சட்டத்தின் படி ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் இலங்கைக்கு திரும்பி விசாவைப் புதுப்பிக்கும் நிலை காணப்படுகின்றமையினால் அவர்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் காலமான நான்கு வருடங்களுக்கு விசா காலத்தை அதிகரித்து தருமாறு ஷாம்ப்ரி அப்துல் காதிரிடம் செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலேசியாவில் உயர்கல்வி 

இதனடிப்படையில், ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஷாம்ப்ரி அப்துல் காதிர் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மலாய் மொழிக்கான பயிற்சியை இலங்கையில் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் மலேசியாவிற்கும் இலங்கைக்குமான கல்வி தொடர்பான கூட்டு பரிமாற்ற திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும்,  இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சரவணன் முருகன் (Datuk Seri Saravanan Murugan) மற்றும் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் சுமங்கல டயஸ் (Sumangala Dias) ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version