Home இலங்கை சமூகம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை தவிர்க்கக் கூடும் என எச்சரிக்கை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை தவிர்க்கக் கூடும் என எச்சரிக்கை

0

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தருவதனை தவிர்க்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் பயணத்துறையைச் சேர்ந்த தரப்பினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த விடத்தை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இணைய வழி விசா

ஒன்லைன் விசா தொடர்பில் நிலவும் சர்ச்சைகளினால் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் இணைய வழியில் விசா பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இடைநிறுத்தியதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதனை தவிர்க்கும் சாத்தியம் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் இலங்கை தவிர்ந்த வேறும் சுற்றுலா நாடுகள் நோக்கிப் பயணிக்கக் கூடும் என தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டுப் பயணிகளுக்கான விசா வழங்கும் நடவடிக்கைகள் கிரமமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென சுற்றுலாத்துறைசார் தரப்பினர் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரியுள்ளனர்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள ஒன் அரைவல் விசா முறைமையின் மீது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீ.எப்.எஸ் க்ளோபல் நிறுவனத்திடம் இணைய விசா விண்ணப்பங்களை கையாளும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கினைத் தொடர்ந்து குறித்த நிறுவனம், விசா கையாளுகைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஒன்அரைவல் அடிப்படையில் விசா விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த சேவையை வழங்கி வந்த மொபிடெல் நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து ஆராயுமாறு நீதிமன்றம், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், மொபிடெல் நிறுவனத்திற்கு மீண்டும் சேவையை வழங்குவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக சட்ட மா அதிபர் நீதிமன்றில் கோரியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version