Home இலங்கை அரசியல் அடுத்த ஐந்தாண்டுகளில் மலையகத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் : ஜனாதிபதி உறுதி

அடுத்த ஐந்தாண்டுகளில் மலையகத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் : ஜனாதிபதி உறுதி

0

அடுத்த ஐந்தாண்டுகளில் மலையகத்தில் பல
வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும், மலையக மக்கள் தனது பக்கம் நிற்பது தனது பலம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,
பொதுச்செயலாளர்  ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி
ராமேஸ்வரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

குறித்த விடயத்தை கொட்டகலையில் இன்று (18) தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்னர்
ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள்  குறிப்பிட்டுள்ளனர்.

சம்பள பிரச்சினை

இதனடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டுள்ளதுடன் கடந்த இரு
வருடங்களில் பல வேலைத்திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளதாகவும் சம்பள பிரச்சினை தொடர்பிலும் அதிக
அக்கறையுடன் செயற்பட் டுள்ளதாகவும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்கள்
சம்பந்தமாகவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புரிந்துணர்வு உடன்படிக்கை

இதன்போது கருத்து வெளியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனநாயக முறைப்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

தேசிய சபைக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளையும்
முன்வைத்தனர் இவை சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி புரிந்துணர்வு
உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக  நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் (M. Rameshwaran) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version