Home சினிமா ஜெயிக்கவே கூடாதுனு விளையாடுறீங்களா.. தோனியை தாக்கி பதிவிட்ட நடிகர் விஷ்ணு விஷால்

ஜெயிக்கவே கூடாதுனு விளையாடுறீங்களா.. தோனியை தாக்கி பதிவிட்ட நடிகர் விஷ்ணு விஷால்

0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்று இருக்கிறது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு இது வரலாற்று தோல்வி என்பதால் கடும்மையாக அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக தோனியை தான் அதிகம் பேர் தாக்கி பேசி வருகின்றனர். கடைசியாக களமிறங்கி சில ஓவர்கள் மட்டுமே அவர் ஆட வருவதாகவும் பலரும் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஷ்ணு விஷால் காட்டமான பதிவு

இந்நிலையில் நடிகர் விஷ்னு விஷால் தற்போது தோனி பற்றி காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

“நானே கிரிக்கெட்டர் என்பதால் இதை பற்றி பேச வேண்டாம், பேச வேண்டாம் என இருந்தேன். மிக சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டாம் என இருந்தேன். ஆனால் இது மிகவும் கோரமாக இருக்கிறது.”

“ஏன் இவ்வளவு down the order வர வேண்டும். வெற்றி பெறவே கூடாது என எந்த விளையாட்டையாவது விளையடுவார்களா.”

“சர்க்கஸுக்கு செல்வது போல தான் இருக்கிறது. விளையாட்டை விட ஒரு தனிநபர் பெரியது இல்லை” என விஷ்ணு விஷால் கூர் இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version