Home இலங்கை அரசியல் ஈரான் அதிபரின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்

ஈரான் அதிபரின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்

0

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காவல்துறையினரும் முப்படையினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் வாழ் தமிழர்களுக்கு எச்சரிக்கை! 25000 பவுண்ட் இழந்த பெண்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை

குறிப்பாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையும் மூடப்படவுள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கைத் தமிழர்களின் தனித்துவ பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம்

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஈரான் அதிபர் நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

ஈரான் அதிபர் இப்ரஹிம் ரைசியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்துடன் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) கூறியுள்ளார்.

அரசியல் தீர்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வருவார்கள் : நம்பிக்கை தெரிவித்த சிறீரங்கேஸ்வரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version