Home இலங்கை அரசியல் வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு மக்களை அழிப்பதற்கே..!

வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு மக்களை அழிப்பதற்கே..!

0

வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கான கூட்டு. எனவே மக்கள் இது குறித்து விழிப்படைய வேண்டும் என  விமலசேன
லவக்குமார் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (19) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகமான தமிழ் இளைஞர்கள்

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்
தொடர்பாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தொடர்பாகவும் பல
விமர்சனங்கள் உண்டு.

இவர்கள் எல்லாம் மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இந்தமுறை
போட்டியிடுகின்றனர்.

எனவே மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் இவர்கள் மக்களின் இருப்புக்களை
சுரண்டி எத்தனையோ உயிர்களை பறித்தவர்கள்.

விடுதலைப் புலிகளில் இருந்து பிள்ளையான் கருணா பிரிந்தபோதுதான் அதிகமான தமிழ்
இளைஞர்கள் கொல்லப்பட்டனர்

இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அநேகமானவர்கள் உறவுகளை பறிகொடுத்தவர்களாக இருக்கின்றோம் எனவே நாம் விழிப்போடு
இந்த தேர்தலில் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version