Home சினிமா பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி

பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி

0

பிக் பாஸ் ஷோ என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதில் போட்டியாளராக கலந்துகொண்டால் புகழின் உச்சிக்கே சென்று விடலாம் என்கிற எண்ணத்தில் பலரும் போட்டியாளராக வருகின்றனர்.

ஆனால் இந்த ஷோவில் கலந்துகொண்டதற்காக அதிகம் ட்ரோல்களை சந்தித்தவர்களும் இருக்கிறார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா அதில் ஒருவர்.

அவர் பிக் பாஸில் செய்த விஷயங்களுக்காக சமூக வலைத்தளங்களில் அதிகமான நெகடிவ் கமெண்டுகளை பெற்றார். நீண்ட காலமாக அது தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.

தற்கொலை செய்ய நினைத்தேன்..

அர்ச்சனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது தான் பிக் பாஸ் சென்று வந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற முடிவெடுக்கும் அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்ததாக கூறி இருக்கிறார்.

தற்போது தான் உயிரோடு இருப்பதற்கு காரணம் அர்ஜுன் (தன்கையின் கணவர்) தான் என அர்ச்சனா பேட்டியில் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version