Home சினிமா ஹீரோ ஆகும் VJ சித்து.. டிராகன் படத்தால் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு! இயக்குனர் இவரா?

ஹீரோ ஆகும் VJ சித்து.. டிராகன் படத்தால் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு! இயக்குனர் இவரா?

0

ஒரு காலத்தில் சின்ன திரையில் பாப்புலராக இருந்தவர்கள் பலருக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறி யூடியூபில் பிரபலமாக இருப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் வீடு தேடிச் செல்கிறது.

அந்த வகையில் யூடியூபில் பிரபலமாக இருக்கும் VJ சித்து தற்போது படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நண்பராக அவர் நடித்திருந்தார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது.

காதல் தான் ஜெயிக்கும்.. த்ரிஷா வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ வைரல்!

ஹீரோ

இந்நிலையில் அடுத்து VJ சித்து ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம். அந்த படத்தை சித்துவே இயக்கப் போகிறார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கப் போகிறதாம். அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ உடன் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

NO COMMENTS

Exit mobile version