Home இலங்கை சமூகம் இலங்கையை வந்தடைந்தார் ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர்

இலங்கையை வந்தடைந்தார் ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர்

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் (High Commissioner for Human Rights) வோல்கர் டுர்க் (Volker Türk), இலங்கையை வந்தடைந்தார்.

நான்கு நாள் அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இலங்கை விஜயம் செய்துள்ளார்.

இந்த பயணம், கடந்த 9 ஆண்டுகளில் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ விஜயமாகும்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), அவரை இலங்கையின் பிரதிச வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்.

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களையும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version