Home இலங்கை அரசியல் வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் சிறப்பு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதனபடி, இந்த வாக்காளர் அட்டைகள் ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார (Ruwan Sathkumara) தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏப்ரல் 20 ஆம் திகதி சிறப்பு விநியோக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுதல்

இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலுக்கான 4 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் (Government Printing) தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டுகள் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் அதிகாரி பிரதீப் புஷ்பகுமார (Pradeep Pushpakumara) குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 9 மாவட்டங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணியும் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version