எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும்
பணியில் தபால் ஊழியர்கள் இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் திணைக்களத்தினால்
நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக அஞ்சல் திணைக்களத்திடம் வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் வீடு வீடாக சென்று அதனை விநியோகிக்கும் நடவடிக்கையில் தபால் ஊழியர்கள்
ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியிலும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
