Home இலங்கை அரசியல் தேர்தல் குறித்து நாட்டு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

தேர்தல் குறித்து நாட்டு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

0

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரையிலும் கிடைக்கபெறாதவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாக்காளர் அட்டைகளை, எதிர்வரும் 18, 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

இதனை பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க (Rajitha K. Ranasinghe) குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளில் 98 சதவீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த 3 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening

Source: https://ibctamil.com/article/voter-cards-available-at-post-offices-1726546178

NO COMMENTS

Exit mobile version