ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கொள்ளையடிப்பதற்கோ ஊழல் செய்வதற்கோ ஆட்சிக்கு வரவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய அரசாங்கத்திற்கு இன்னும் சிறிது கால அவகாசத்தை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
75 வருடகாலமாக ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்ட நாம், இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் சீரடையும் எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், சிலர் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாக செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை தொடர்பாக மக்களின் கருத்துக்களை செவிமடுக்கின்றது எமது மக்கள் குரல் நிகழ்ச்சி,