Home இலங்கை அரசியல் வடகிழக்கின் வாக்குகளே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : அங்கஜன் தெரிவிப்பு

வடகிழக்கின் வாக்குகளே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : அங்கஜன் தெரிவிப்பு

0

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலே தென் பகுதியிலுள்ள வாக்குகள் பிரிவடையும் போது வட கிழக்கிலுள்ள வாக்குகள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய சக்திகளாக மாற்றமடைவதற்கான சந்தர்ப்பம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.  

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள
அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் நேற்று (30) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் குறைந்தபட்சம் தற்போதுள்ள நிலைமையை பேண வேண்டும் என்றால் வாக்களித்தே ஆக வேண்டும்.

இந்நிலையில் நான் தமிழ் மக்களுடைய கோரிக்கையை கடிதமாக முன்வைத்து ஜனாதிபதியிடம் கையளித்தேன். அதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டு அது சார்ந்து செய்திருக்ககூடிய விடயங்களை என்னோடு பேசினார்.

மேலும் கடந்த 2 வருடங்களாக நாம் பிரச்சினைகள் அற்று வாழ்க்கையை நடாத்தக்கூடிய சூழவ் இருந்தது. ஆகவே நாம் அவ்வாறானதொரு நிலைமையில் வாழ வேண்டும் என்றால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

NO COMMENTS

Exit mobile version