Home இலங்கை அரசியல் வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்!

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்!

0

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில்
இன்று (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நிறைவடைந்துள்ளன. 

யாழ்ப்பாணம்

இந்நிலையில், 2 இலட்சத்து 32 ஆயிரத்து 233 பேர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களில் 36087 பேர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தலில் 397041 பேர் வாக்களித்திருந்தனர்.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 593187 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 360,954 பேர் வாக்களித்துள்ளனர். 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால்
மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு
இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய
வகையில் பி.ப 03.00 மணி நிலவரப்படி 47% வீதமான
வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. 

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு சுமுகமாக
நடைபெற்று வருகின்றது.

இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான
வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.

செய்தி-கஜிந்தன்

கிளிநொச்சி

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம்
தமது ஜனநாயக கடமையினை மக்கள் ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,
இம்முறை 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம்
தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையை
அவதானிக்க முடிகிறது.

செய்தி- காண்டீபன்

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 64.09 வீதம் வாக்கு பதிவு வாக்குப்பெட்டிகள்
வாக்கெண்ணும் நிலையமான முல்லைத்தீவு மகா வித்தியாலயத்துக்கு
கொண்டுவரப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று  காலை பத்து மணிவரை 23.23% வீதமான வாக்குகள்
பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேர்தல் நிலமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள்
இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதிய
தலைவர்களை தெரிவு செய்ய அமைதியான முறையில் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு
நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு
நிலையங்களுக்கும் வாக்களிக்க தகுதிபெற்ற 86869 பேர் இன்றையதினம் வாக்களிக்க
இருக்கின்றனர்.

அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1500 மேற்பட்ட அரச
உத்தியோகத்தர்கள், 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஈடுபட்டிருக்கின்றதுடன்
தேர்தல் கடமையில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்க
கூடியதாக இருக்கின்றது.

செய்தி- சதீசன்

மன்னார் 

மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு கள் நிறைவடைந்துள்ள
நிலையில் இன்றைய தினம் 4 மணியுடன் தபால் மூல வாக்களிப்பு
உள்ளடங்களாக 74 வீத வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல்
தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 மன்னார் மாவட்டத்தில் சுமூகமாக இடம்
பெற்று வரும் நிலையில் காலை 7 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை கிடைக்கப்பெற்ற
தகவலின் அடிப்படையில் 55.5 வீதமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக க.கனகேஸ்வரன்
தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் காலை 7 மணி தொடக்கம் 10
மணி வரையான நிலவர படி 98 வாக்களிப்பு நிலையங்களில் 21,784 வாக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளதாகவும் இது மொத்த வாக்களிப்பில் 24 வீதமாகும்.

அதே நேரம் இதுவரை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை மன்னார்
மாவட்டத்தில் 26 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அதில் இன்றைய
தினம் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை சுமூகமான முறையில்
தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில்
வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றது.

காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள்
வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ள நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலை பார்கிலும் காலை நிலவரபடி அதிகமான
மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

செய்தி-ஆசிக்

வவுனியா

வவுனியாவில் சுமுகமான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதுடன், இன்று காலை 10 மணி வரை
25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல்
தெரிவித்தாட்சி அலுவலருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  முல்லைத்தீவில்
22.74 வீதமும், மன்னாரில் 18.5 வீதமும் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

அந்தவகையில் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில்
காலை 10 மணிவரை 22 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி-திலீபன்

வன்னி தேர்தல்மாவட்டத்தில் 65.5சதவீத வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக
வன்னிமாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பி,ஏ. சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் வன்னிமாவட்டத்தில் 65.5 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வவுனியாவில் 63.75 வாக்குகளும்,
முல்லைத்தீவில் 62.45 வாக்குகளும், மன்னாரில்70 வீதமான வாக்குகளும்
பதிவாகியுள்ளது.

இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகளுக்கான
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. மாலை 4.30மணியளவில் தபால்
மூலமான தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மாலை 7மணியளவில் ஏனைய வாக்குகள் எண்ணுவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

செய்தி-திலீபன்

Sri Lanka Parliament Election 2024 Live Updates

NO COMMENTS

Exit mobile version