Home இலங்கை அரசியல் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது புறக்கணிப்புக்கு சமம்: கஜேந்திரக்குமார்

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது புறக்கணிப்புக்கு சமம்: கஜேந்திரக்குமார்

0

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது புறக்கணிப்புக்கு நிகராகவே பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

எமது ஊடகத்திற்கு வழங்கிய தனிப்பட்ட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியிடும் வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க ஆகியோரின் நிலைப்பாடானது13ஆம் திருத்தத்தை வைத்து அதை ஒரு பேச்சுப்பொருளாக கொண்டுவரும் நிலைப்பாடாகவே காணப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைபில் அங்கம் வகித்த அத்தனை கட்சிகளும் தமிழ் தேசிய நீக்கத்தையே செய்கிறது.

தமிழ் மக்களுடைய தேசிய அபிலாஷைகளை உள்வாங்காத எந்த ஒரு கட்டமைப்பையும் நாங்கள் ஏற்க முடியாது என்ற செய்தியை ஆணித்தரமாகவும், பாதுகாப்பாகவும் கொடுக்க கூடிய ஒரே தேர்தல் முறைமை தான் ஜனாதிபதி தேர்தல்.

தமிழ் பொதுவேட்பாளருக்கு போடுகின்ற வாக்கும், சிங்கள வேட்பாளருக்கு போடும் வாக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் இரண்டு தரப்பும் உண்மையிலேயே ஒற்றையாட்சிக்குள் இருக்க கூடிய ஒரு கட்டுமானத்துக்கு தான் விசுவாசமாக செயல்படுகிறார்கள்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்…

https://www.youtube.com/embed/Y_nxHbldgfc

NO COMMENTS

Exit mobile version