Home விளையாட்டு லங்கா பிரிமியர் லீக் தொடர்: வனிந்து ஹசரங்கவுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

லங்கா பிரிமியர் லீக் தொடர்: வனிந்து ஹசரங்கவுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

0

நடைபெற்றுக் கொண்டிருக்கும் லங்கா பிரிமியர் லீக் (LPL) தொடரில் கண்டி ஃபால்கன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு (Wanindu Hasaranga) ரூ.11 இலட்சம் அபராதம் விதிக்க போட்டிக் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லங்கா பிரிமியர் லீக் போட்டியின் ஆடை, பொருட்கள் தொடர்பான சட்டத்தை மீறியமை காரணமாகவே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு அணியின் நிறங்கள் அடங்கிய தனித்தனி ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

நடுவரின் கோரிக்கை

எனினும், அண்மையில் நடைபெற்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் (Colombo Strikers) மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் (Kandy Falcons) அணிகளுக்கிடையிலான போட்டியின் போது வனிந்து ஹசரங்க வித்தியாசமான இலட்சினை கொண்ட தலைக்கவசத்தை அணிந்து மைதானத்திற்கு வந்திருந்தார்.

​​இந்த நிலையில், அதனை கழற்றுமாறு நடுவர் ரோலி பிளாக் (Roly Black) கோரிக்கை விடுத்திருந்த போதிலும் நடுவரின் கோரிக்கையை ஏற்காததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போட்டி கட்டணம்

இதன்படி, வனிந்து ஹசரங்க இந்த வருட போட்டியில் பெற்ற போட்டி கட்டணத்தில் இருந்து இந்த தொகையை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், போட்டிகளின் முடிவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு வீரர்கள் முழு உடை அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version