Home இலங்கை அரசியல் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண சஜித்தின் புதிய யோசனை

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண சஜித்தின் புதிய யோசனை

0

ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்ப 22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை
ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (09.07.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2020 முதல், கல்வித்துறையில் 40, 000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் போது, அதனை​​ நிவர்த்திக்கும் முகமாக ஏறக்குறைய 22, 000 அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

குறைபாடுகள் 

கோவிட் காலத்தில் இணையவழி
ஊடாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, இந்த உபகரணங்கள் போதியளவு
இல்லாமலும் தொலைதூரக் கல்வி நடவடிக்கைகளை
சிறந்த முறையில் முன்னெடுத்து வந்தனர்.  

இவ்வாறு தமது பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வந்த இந்த 22, 000 பேருக்கும் ஏன்
அவர்களுக்கென குறிப்பிட்ட நிலையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாதிருக்கிறது?

இந்த 22, 000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் கல்வித்துறையில் உரிய இடம்
வழங்கப்பட வேண்டும். இதற்கு ஒரு தீர்வு காணப்பட
வேண்டும்.

இதற்கு மேலதிகமாக கல்வித்துறையில் காணப்படும் 7 பகுதிகளிலும் குறைபாடுகள்
காணப்படுகின்றது. அது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version