Home முக்கியச் செய்திகள் தீவிரம் அடையும் போர் பதற்றம்: புடின் விடுத்துள்ள எச்சரிக்கை

தீவிரம் அடையும் போர் பதற்றம்: புடின் விடுத்துள்ள எச்சரிக்கை

0

ரஷ்யாவின் (Russia) இறையாண்மையை காப்பாற்ற கடைசி அஸ்திரமாக அணுவாயுதத்தை  பயன்படுத்தவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யா தனது உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்களின் ஆயுதக் களஞ்சியத்தை ஒரு தடுப்பாக தற்காத்துக் கொள்வதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் அணுசக்தி முக்கோணம் 

இந்த நிலையில், அணுசக்தி முக்கோணத்தை மூலோபாயத் தடுப்புக்கான உத்தரவாதமாக மேலும் மேம்படுத்தவும், உலகில் அதிகார சமநிலையைப் பாதுகாக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று புடின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவின் அணுசக்தி முக்கோணம் என்பது அதன் நிலம், கடல் மற்றும் வான்வழி ஏவக்கூடிய அணு ஏவுகணைகளைக் குறிப்பதாகும். 

NO COMMENTS

Exit mobile version