Home முக்கியச் செய்திகள் கனடாவில் உப்பு வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் உப்பு வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

கனடாவில் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பிரசிடன்ட்ஸ் சொய்ஸ் பண்டக்குறியைக் கொண்ட இரண்டு வகை உப்பு உற்பத்திகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குறித்த உப்பு வகைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்திருந்தமையினால் அவை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீளப்பெறப்படும் உப்பு வகைகள்

அந்தவகையில், ஹிமாலயன் பின்க் ரொக் சால்ட் மற்றும் மெடிடிரெயியன் சால்ட் என்பனவே இவ்வாறு சந்தையிலிருந்து மீளப்பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 360 கிராம் எடையுடைய பக்கட்டுகளில் அடைக்கப்பட்ட உப்பு இவ்வாறு சந்தையிலிருந்து மீளப்பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version