Home இலங்கை சமூகம் மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

0

மேல் மாகாணத்தின் கீழ் உள்ள 31 மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து துணை
மருத்துவ நிபுணர்களும்,எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தொழிற்சங்க
நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

கடுமையான முறைகேடுகள் மற்றும் பரவலான ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், மாகாண
சுகாதார சேவைகள் பணிப்பாளர் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ள இடமாற்ற
உத்தரவுகளுக்கு எதிராகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக

இடமாற்ற உத்தரவுகள் நாளை 18 ஆம் திகதியன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை மையப்படுத்தியே 19ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக
பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், எந்தவொரு பொறுப்பான அதிகாரியும் இந்த
விடயத்தைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று துணை மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்/

இந்த தொழிற்சங்க நடவடிக்கையில்; கதிரியக்க நிபுணர்கள், மருத்துவ ஆய்வக
தொழில்நுட்ப வல்லுநர்கள், பிசியோதெரபிஸ்டுகள், பேச்சு சிகிச்சையாளர்கள்
மற்றும் மருந்தாளுநர்கள் உட்பட ஏழு வகை துணை மருத்துவ நிபுணர்கள் ஈடுபடவுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version