Home உலகம் அரசியலில் குதிக்கின்றாரா பாகிஸ்தான் இராணுவ தளபதி..! வெளிானது அறிவிப்பு

அரசியலில் குதிக்கின்றாரா பாகிஸ்தான் இராணுவ தளபதி..! வெளிானது அறிவிப்பு

0

‘பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அரசியலில் நுழையும் திட்டம் ஏதுமில்லை; அவை வதந்திகள்’ என அந்நாட்டின் இராணுவ தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார்.

சுதந்திரம் பெற்ற 1947ல் இருந்து பாகிஸ்தானில், நான்கு முறை இராணுவ தளபதிகள் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்திற்கு வந்துள்ளனர். தற்போது, பாகிஸ்தான் இராணுவ தளபதியாக அசிம் முனீர் உள்ளார்.

அசிம் முனீர் அதிகாரத்தை கைப்பற்ற கூடும்

 அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அந்த நாட்டின் இராணுவ அதிகாரிகளுடனான அசிம் முனீரின் தொடர்பு, சீனாவுடனும் நெருக்கம் போன்ற காரணங்களால், ஷெபாஸ் ஷெரீப் அரசை கவிழ்த்துவிட்டு, அசிம் முனீர் அதிகாரத்தை கைப்பற்ற கூடும் என்ற தகவல் வெளியானது.

இது குறித்து அசிம் முனீர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ” கடவுள் என்னை இந்த நாட்டின் பாதுகாவலராக ஆக்கியுள்ளார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன் என்பது புனையப்பட்டவை. பாகிஸ்தானை சீர்குலைக்க முயற்சிப்பவர்களால் இது போன்ற செய்தி பரப்பப்படுகிறது,” என்றார்.

NO COMMENTS

Exit mobile version