Home இலங்கை அரசியல் இரவில் அனுமதியின்றி வீடுகளுக்குள் நுழையும் பொலிஸாருக்கு எச்சரிக்கை

இரவில் அனுமதியின்றி வீடுகளுக்குள் நுழையும் பொலிஸாருக்கு எச்சரிக்கை

0

இரவில் அனுமதியின்றி வீடுகளுக்குள் நுழைந்து சோதனை செய்யும் உரிமை பொலிஸ் அதிகாரிகளுக்கு இல்லை என ஜனாதிபதி வழக்கறிஞர் உப்புல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சோதனை செய்வதற்கு தேடுதல் பிடியாணை இருக்க வேண்டும் என ஜனாதிபதி வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சோதனை செய்வதன் சட்டங்கள் தெரியாதவர்கள் 1997ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் படிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

1997ஆம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்கவின் வீட்டிற்குள் பொலிஸார் பலவந்தமாக நுழைந்தமை மற்றும் முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவை சோதனை செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியிருந்தது.

அடிப்படை உரிமைகள்

தனது வீட்டிற்குள் பொலிஸார் பலவந்தமாக நுழைந்தது மற்றும் நாலந்த எல்லாவல கொலையில் சந்தேக நபரான சுசந்த புஞ்சிநிலமேவை சோதனை செய்தது தொடர்பாக SC/FR/239/97 அடிப்படை உரிமைகள் வழக்கை அனுர பண்டாரநாயக்க தொடர்ந்தார்.

1997ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி அன்று அதிகாலை 2.15 மணியளவில், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பிடியாணை இல்லாமல் மனுதாரரின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, அதன் தீர்ப்பில், இந்த சம்பவம் அனுர பண்டாரநாயக்கவின் அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறியது.

எனவே, மனுதாரருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version