பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, கொழும்பு முதல் புத்தளம் மற்றும் மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 55-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
அதே நேரத்தில், கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
