Home இலங்கை அரசியல் ரணிலின் கைது தொடர்பில் அநுர அரசுக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் பிரதியமைச்சர்

ரணிலின் கைது தொடர்பில் அநுர அரசுக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் பிரதியமைச்சர்

0

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் முதன் முறையாக
அசிங்கப்படுத்தப்பட்டிருப்பது இந்த நாட்டில் பாரியதொரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச 20 வருடங்கள் ஆட்சி செய்வேன் என
நினைத்தவர் இரு வருடங்களில் கவிழ்க்கப்பட்ட வரலாற்றை அரசு சிந்திக்க
வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றையதினம் (23) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே
இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒரு நாட்டுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி முறை 1978ம் ஆண்டுக்கு
பிறகு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் ஆரம்ப காலத்தில் இருந்து ஜனாதிபதி பிரதமர் முறை சோல்பரி அரசியலமைப்பில்
உருவாக்கப்பட்டிருந்தது.

ஜெ.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச மகிந்த ராஜபக்ச,
சந்திரிகா குமாரதுங்க போன்ற தலைவர்கள் எல்லாம் இந்த நாட்டில் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட போது 50.1 அல்லது 53 சத வீத வாக்குகளை பெற்று வருகின்ற போது முதன்
முறையாக அநுர குமார திசாநாயக்க அவர்கள் 50 வீதத்துக்கு குறைவாக பெற்றாலும் கூட
பெற்றவர்களின் கூடுதலாக பெற்றவர்களின் வாக்கின் அடிப்படையில் அவர் இந்த
நாட்டினுடைய ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version