Home இலங்கை அரசியல் போதை பொருள் குற்றச்சாட்டு – தேசிய மக்கள் சக்திக்கு தொடர்பில்லை! வசந்த முதலிகே திட்டவட்டம்

போதை பொருள் குற்றச்சாட்டு – தேசிய மக்கள் சக்திக்கு தொடர்பில்லை! வசந்த முதலிகே திட்டவட்டம்

0

போதை பொருள் மாபியா,பாதாள குழுங்களிடம் தேசிய மக்கள் சக்திக்கு தொடர்பென எவ்வித குற்றச்சாட்டும் இல்லை என மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர்,

குற்றம் சுமத்த விரும்பவில்லை

இந்த அரசுக்கு குடு தொடர்பில் ஏதோ ஒரு குற்றச்சாட்டு இருந்தால் இது கொள்கலன் விடுவிப்பு மட்டும் தான்.அரசாங்கத்தின் உள்ளுராட்சி உறுப்பினர் ஒருவரின் கணவர் ஹெரோயின் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அரசியல்வாதிகள் அனைவரும் போதை பொருளுடன் தொடர்பு பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டு மீளவும் சமூக ஊடகங்களில் பூதாகரமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு அரசியல் செயற்பாட்டாளர்கள் என்ற நிலையில்,தேசிய மக்கள் சக்திக்கு போதை பொருள் தொடர்பில் குற்றச்சாட்டு இருக்கவில்லை.

இது தான் முதல் சம்பவமாகும்.இந்த சம்பவத்தை முதல் கொண்டு, அரசாங்கத்தை போதை மாபியாக்கள் என பிரசாரப்படுத்த நாங்கள் தயாரில்லை.
ஆனால் கடந்த அரசாங்கங்கள் அனைத்தும் போதை மாபியாக்களுடன் டீல் வைத்திருந்தனர்.

மேலும் பாதாள செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயற்பட்டமை தெட்டத் தெளிவானதாகும்.இப்பொது நாங்கள் குடுகாரர்களுடன் அரசு டீல் வைத்துள்ளது என கூற முயற்சிக்க மாட்டோம் என்றார்.

NO COMMENTS

Exit mobile version