Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தரப்பின் மீது குற்றம் சுமத்திய வசந்த சமரசிங்க

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தரப்பின் மீது குற்றம் சுமத்திய வசந்த சமரசிங்க

0

Courtesy: Sivaa Mayuri

அரிசி கையிருப்புக்களை சந்தைக்கு விநியோகிக்க தவறிய ஆலை உரிமையாளர்களில் ஒருவர், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

வாத பிரதிவாதங்கள்

குறித்த அரிசி ஆலையின் உரிமையாளர், உள்ளூர் வங்கியொன்றில் 3.5 பில்லியன் ரூபா கடனாக பெற்றுள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்தக்கூற்றை அடுத்து கருத்துரைத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலிலும் தற்கொலை குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்களே உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் மற்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்ட போது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.  

NO COMMENTS

Exit mobile version