Home இலங்கை அரசியல் அறிக்கையில் இருப்பதை விட இரண்டு மடங்கு சொத்து..! வசந்தவின் சொத்து தொடர்பில் தொடரும் சர்ச்சை

அறிக்கையில் இருப்பதை விட இரண்டு மடங்கு சொத்து..! வசந்தவின் சொத்து தொடர்பில் தொடரும் சர்ச்சை

0

தம்புத்தேகமவில் உள்ள தனது வணிகக் கட்டிடத்தின் மதிப்பு, சொத்து பொறுப்பு அறிக்கையில் உள்ளதை விட இரண்டு மடங்கு இருக்கலாம் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது கட்டிடத்திற்கு அடுத்துள்ள கட்டிடம் மிக அதிக விலைக்கு விற்கப்பட உள்ளது என்றும், அதன்படி தனது கட்டிடமும் அதிக மதிப்பைக் கொண்டிருக்கும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

தம்புத்தேகமவில் வசிக்கும் மக்கள் தங்கள் குடும்பத்தின் சொத்துக்கள் தொடர்பில் அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் பல்கலைக்கழகம் செல்லும் முன்னரே தனியார் வகுப்புக்களை நடத்தியதாகவும் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக நிலம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் 2010, 2015, 2020 மற்றும் 2024ஆம் ஆண்டுகளிலேயே தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை சமர்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள், அவர்கள் செய்ததை தாம் செய்ததாக காட்ட முயற்சிக்கின்றார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version