Home இலங்கை அரசியல் ஹோலி பண்டிகையில் பங்கேற்ற ஆளும் தரப்பு எம்.பி

ஹோலி பண்டிகையில் பங்கேற்ற ஆளும் தரப்பு எம்.பி

0

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe), இந்தியர்களின் பிரதான கொண்டாட்டங்களில் ஒன்றான ஹோலி பண்டிகையில் கலந்து கொண்டார்.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற ஹோலி பண்டிகையை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

ஹோலி பண்டிகை

குறித்த விழாவில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட இராஜதந்திர அழைப்பின் பேரில் அமைச்சர் வசந்த சமரசிங்கவும் அதில் கலந்து கொண்டுள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா நிகழ்வின் பிரதான அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள், இராஜதந்திர வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version