Home இலங்கை சமூகம் ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் மீது குளவி தாக்குதல்: ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் மீது குளவி தாக்குதல்: ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

பொகவந்தலாவ மோரா தோட்டத்தில் நடைமுறைப் பயிற்சிக்காக வந்த ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் குழுவை இன்று குளவிகள் தாக்கியுள்ளது.

அதில் ஆறு மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதி

களப்பயணத்தின் போது மாணவர்கள் தேயிலைத் தோட்டத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டை கிளறியதும், குளவிகள் அவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மாணவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொகவந்தலாவ பொலிஸார் இந்த சம்பவத்தைப் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version