இந்த பெரும் போகத்திற்கான அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியம் இன்னும் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொலன்னறுவை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், சில பிரதேசங்களில் மானிய விலை உரங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி
குறித்த விடயத்தை விவசாய அபிவிருத்தி ஆணையர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மொரகஹகந்த – எலஹெர விவசாயிகள் பெரிய வெங்காயத்திற்கு இன்னும் சரியான விலை இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தநிலையில், அறுவடை முடிந்து சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியும் விலை இல்லாததால் விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
