Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவர்கள் 100 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலை மாணவர்கள் 100 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சுமார் 100 மாணவர்கள் இன்று (30) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து மாணவர்கள் உடனடியாக ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில் 70 மாணவர்கள் தற்போது ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், ஏனைய மாணவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மாணவர்களுக்கான பாதுகாப்பு

பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையின் ஊழியர்கள் இருவர் பாடசாலைக்கு அருகிலிருந்த மரத்தில் குளவி கூட்டினை கல்லால் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனடியாக மாணவர்களை பாதுகாப்பான வகுப்பறைகளுக்கு மாற்றியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version