அரச சேவைகளின் வினைத்திறனை இலத்திரனியல் மயமாக்கல் ஊடாக மேம்படுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உறுதியளித்துள்ளார்.
அத்துடன், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அரசாங்கம் மிகவும் திறமையாக வேலை செய்ய முடியும் என்றும் பல்வேறு நிர்வாகப் பணிகளை முடிக்க எடுக்கும் நேரத்தை குறைக்க முடியும் எனவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலத்திரனியல் மயமாக்கல்
அத்துடன், இலத்திரனியல் மயமாக்கல் மூலம் இனி விமான கடவுச்சீட்டு பெறுதல் போன்ற சேவைகளுக்காக இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி நிலை இருக்காது என தெரிவித்த நாமல், நாட்டில் தொழிநுட்ப முன்னேற்ங்களின் பின்னடைவை விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, “இன்று உலகில் ஏராளமான தொழில்நுட்பம் உள்ளது அவைகளை நாட்டிற்கு நாங்கள் அறிமுகப்படுத்துவோம்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மற்றும், அரசியல் தலையீடு இல்லாமல் பொது சேவை செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், இலத்திரனியல் பொது சேவைகளை கட்டாயமாக்க நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.