Home முக்கியச் செய்திகள் சிகிரியாவை பார்வையிடச் சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை : பலர் வைத்தியசாலையில்

சிகிரியாவை பார்வையிடச் சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை : பலர் வைத்தியசாலையில்

0

சிகிரியாவை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு மீது குளவி கொட்டியதைத் தொடர்ந்து சிகிரியாவை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (14) பிற்பகல் குளவி தாக்கியதில் 26 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 13 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சீகிரிய கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவிகள் மேலெழும்ப காரணம் 

இந்த நாட்களில் அதிக வெயில் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் காணப்படுவதே குளவிகள் மேலெழும்ப காரணம் என சுற்றுலா வழிகாட்டிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பணத்தை மீள வழங்குவதற்கு நடவடிக்கை 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய கலாசார நிதியத்தின் சீகிரிய திட்ட முகாமையாளர் துசித ஹேரத், குளவிகள் தாக்கிய நேரத்தில் சீகிரியாவை பார்வையிடுவதற்கு பயணச் சீட்டுகளை பெற்று உள்ளே செல்ல முடியாதவர்களின் பணத்தை மீள வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குளவிகள் தணிந்தவுடன் சீகிரியாவை சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

குளவிகளை விரட்ட நீராவியை தெளிக்கும் முறை குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.     

NO COMMENTS

Exit mobile version