தமிழ் அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சர் ஒருவர் இருக்க சிங்கள பிரதி அமைச்சரால் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நேர விரயம் ஏற்படுத்தப்பட்டமை குறித்து வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் விசனம் வெளியிட்டுள்ளார்.
மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்திலும் இவ்வாறான கூட்டங்கள்
மேலும் தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சரால் அமைக்கப்பட்ட ஏலம் கூறும் இடம், கடற்றொழிலாளர்கள் தங்கும் இடம்
ஆடு மாடுகள் படுக்கின்ற இடமாக மாறி உள்ளது.
அரசு நிதி பொருத்தமற்ற இடத்தில்
வீணாக்கப்பட்டுள்ளது இது சம்பந்தமாக கதைப்பதற்கு மாவட்ட கடற்றொழிலாளர்
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேரத்தினை கேட்ட பொழுது, நாம் தவிசாளர்களாக
தெரிவு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்களை கூறவே பிரதி அமைச்சர் அமைச்சரும்
அனுப்பி உள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய கூட்டங்கள் இவ்வாறு தான் எதிர்காலத்திலும்
நடக்கும் என்றால் நாங்கள் இவற்றில் இருந்து விலகுவதற்கு தவிசாளர்களாக
தீர்மானித்திருக்கின்றோம்.
கூடுதலான நேரத்தை மொழிபெயர்ப்பில்
மேலும், கடற்தொழில் அமைச்சர் தமிழர் ஒருவர் இருக்கின்ற நிலையில் தென்னிலங்கையில்
இருந்து வருகை தந்த சிங்கள பிரதி அமைச்சர் ஒருவர் நீண்ட நேரம் சிங்களத்தில்
நிகழ்ச்சி நேரலை முன்னெடுத்திருந்தார்.
கடற்றொழில் சங்கப் பிரதிநிதி ஒருவர்
சேந்தான்குள பிரச்சினை தொடர்பாக பேச பிரதி அமைச்சர் ரத்ன கமகே மயிலிட்டி
துறைமுகம் தொடர்பில் பேசிக் கொண்டிருந்தார்.
இது தொடர்பில் கூட்டங்களை
நடத்துகின்ற கடற்றொழில் அமைச்சர், மாவட்ட செயலாளர் கூடுதலான நேரத்தை மொழிபெயர்ப்பில் செலவிடாது மக்களுடைய பிரச்சினைகளை அறிவதற்கு நேரங்களை ஒதுக்க
வேண்டும்.
திட்டமிட்டு இந்த கூட்டங்களை நடத்தி நேரவிரயத்தை தடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
