Home முக்கியச் செய்திகள் கண்டியில் நீர் பற்றாக்குறை : அவசர உதவி கோரும் மக்கள்!

கண்டியில் நீர் பற்றாக்குறை : அவசர உதவி கோரும் மக்கள்!

0

கண்டியில் நீர் விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் அவசர குடிநீர் உதவிக்கான மிக முக்கியமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள அனைத்து நீர் சேமிப்புகளும் தீர்ந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடிநீர் 

கடைகளில் உள்ள அனைத்து தண்ணீர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதால் கண்டியில் பருகுவதற்கு கூட குடிநீர் பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி பகுதிக்கு நீரை விநியோகிக்கும் முக்கிய மையத்தில் பழுது ஏற்பட்டதன் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்பட்டுள்ள தொழிநுட்ப கோளாறு கூடிய விரைவில் சீர் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கண்டியின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்க ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version