Home இலங்கை அரசியல் மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் துண்டிக்கப்பட்ட நீர் விநியோகம்

மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் துண்டிக்கப்பட்ட நீர் விநியோகம்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் ஒரு பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்தாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நீர் விநியோகம்

எனினும், மகிந்த  தங்கியுள்ள பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர் விநியோகம் தொடர்பான கட்டணங்களை ஜனாதிபதி செயலகமே செலுத்தி வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் மனோஜ் கமகே கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version