Home இலங்கை சமூகம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தடைபட்ட நீர்விநியோகம்

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தடைபட்ட நீர்விநியோகம்

0

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்
சபையினூடாக வினியோகிக்கப்பட்டு வரும் குடிநீர் தடைப்பட்டுள்ளது.

இதனால்
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயிசாலையில் விடுதிகளில் தங்கியிருந்து சிசிக்சை பெற்று
வரும் 35 இற்கு மேற்பட்ட சீறுநீரக குருதி சுத்திகரிப்புச் செய்யும் நோயாளர்கள்,
வைத்தியர்கள், தாதியர்கள், உள்ளிட்ட பலரும் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதோடு,
இடையிடையே மின்சாரம் தடைப்பட்டு வருவதனால் வைத்தியசாலை மிகுந்த சிரமத்தையும்
எதிர்கொள்வதாக வைத்திய அத்தியட்சகர் க.புவனேந்திரநாதன் தெரிவித்தார்.

இந்நிலையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ்,
போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் ஆகிய இரு பிரதேச சபைகளின்
தவிசாளர்களின் துரித முயற்சியினால் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (30.11.2025)
வைத்தியசாலைக்கு வவுச்சர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரப்படுகின்றன.

தற்காலிக நடவடிக்கை 

தற்போதைய வெள்ள அனர்த்த நிலமை சீராகும் வரைக்கும் தொடர்ந்து குடிநீரை
இவ்வைத்தியசாலைக்கு போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் வழங்க
முடியும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம்
வினோராஜ் தெரிவித்தார்.

இதுஇவ்வாறு இருக்க இலங்கை மின்சாரசபையின் பொதுமுகாமையாளர், மட்டக்களப்பு
மாவட்ட பிரதம பொறியியலாளர் ஆகியோரின் துரித விசேட தாமதமின்றிய சேவையினால்
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மின்சாரம் கிடைப்பதாகவும், வைத்தியசாலையின்
மின்மாற்றி பழுதடைந்திருந்த போதிலும் விசேடமாக நேரடியான மின் இணைப்பை
ஏற்படுத்தியுள்ளதனால், மாவட்டத்தின் பல வைத்திசாலைகளுக்கு ஒட்சிசன் வழங்கல்,
அப்பகுதி அனைத்து வைத்தியசாலைகளின் தடுப்பு மருந்துகளை களுவாஞ்சிகுடி ஆதார
வைத்தியசாலையில் வைத்து பாதுகாப்பதாவும் வைத்திய அத்தியட்சகர் மேலும்
தெரிவித்தார்.

மின்சாரத்தை வழமைபோன்று சீராக வழங்குவதற்கு ஒருவாரமாகும் அதுவரைக்கும் சுழற்சிமுறையில் மின்சாரத்தை வழங்குவதாகவும் இலங்கை மின்சார சபையின் மாவட்ட
சிரேஸ்ட முகாமையாளர் ஹ_சைன் அறூஸ் இதன்போது தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version