Home முக்கியச் செய்திகள் நிலச்சரிவு அபாயத்தில் கட்டங்கள் : மக்களை உடன் வெளியேற உத்தரவு

நிலச்சரிவு அபாயத்தில் கட்டங்கள் : மக்களை உடன் வெளியேற உத்தரவு

0

கண்டி, பேராதெனிய மற்றும் கன்னொருவ ஆகிய இடங்களில் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருவதால், ஆற்றின் இருபுறமும் உள்ள பல கட்டடங்கள் நிலச்சரிவு அபாயத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே அந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடிந்து விழுந்துள்ள வீதி

இதேவேளை கொத்மலை பாலுவத்தெ பகுதியில் தலவாக்கலை-தவலந்தென்ன வழியாக செல்லும் கொத்மலை சாலையின் 100 மீட்டர் பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக, நிவாரணக் குழுக்கள் கொத்மலை பகுதியை அடைய முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

கொத்மலை பாலுவத்தெ பகுதியில் உள்ள பல வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version