Home இலங்கை சமூகம் கிளிநொச்சி-வட்டக்கட்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தின் தேர்த் திருவிழா

கிளிநொச்சி-வட்டக்கட்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தின் தேர்த் திருவிழா

0

கிளிநொச்சி- வட்டக்கட்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப்
பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று(13) நடைபெற்றுள்ளது.

வரலாற்று சிறப்பு கொண்ட கிளிநொச்சி வட்டக் கட்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள்
ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா கடந்த(5) ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

பத்து தினங்கள் நடைபெற உள்ள இப்பெரும் திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றுள்ளது.

தேர்த் திருவிழா

அதாவது விசேட அபிஷேக பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து ரங்கநாத பெருமாள் உள்வீதி
வலம் வந்ததை அடுத்து தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதில்
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து வருகை தந்து  பெருமளவான பக்தர்கள்
கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version