முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காண்பதற்காக தங்காலையில் அமைந்துள்ள அவரது கால்டன் இல்லத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மகிந்தவின் சுக துக்கம் குறித்து விசாரிப்பதற்காக தாம் வந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் நாட்டை காப்பாற்றிய மகிந்த மீது தாம் அன்பு செலுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
திலீத் ஜயவீர
மகிந்தவின் தங்காலை வீட்டிற்கு செல்லும் பலரும் அவரின் காலை தொட்டு வணங்கி ஆசிர்வாதமும் பெற்றுக் கொள்கின்றனர்.
இவ்வாறிருக்க, பல அரசியல்வாதிகளும் பிரபலங்களும் கூட மகிந்த ராஜபக்சவை காண விரைகின்றனர்.
குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் திலீத் ஜயவீர மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
