Home இலங்கை அரசியல் ஜெனீவாவில் பௌத்த தேரர்களை சந்தித்த அமைச்சர் விஜித

ஜெனீவாவில் பௌத்த தேரர்களை சந்தித்த அமைச்சர் விஜித

0

ஜெனீவாவில் உள்ள சர்வதேச பௌத்த அறக்கட்டளை மற்றும் சர்வதேச பௌத்த மையத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் விஜயம் செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா சென்ற போதே அங்குள்ள சர்வதேச பௌத்த நிறுவனங்களுக்கு விஜயம் செய்துள்ளார்.

சர்வதேச அளவில் மேம்படுத்துவதில்

அங்கு, அமைச்சர் ஹல்யாலே விமலரத்ன தேரர் மற்றும் சர்வதேச பௌத்த அறக்கட்டளையின் ஏனைய தேரர்களையும் சந்தித்துள்ளார்.

கலாசார வெளிப்பாட்டுத் தன்மையை வலுப்படுத்துதல், இலங்கையின் பாரம்பரியத்தை சர்வதேச அளவில் மேம்படுத்துவதில் பௌத்த சமூகத்தின் முக்கிய பங்களிப்பின் பிரதிபலிப்பு தொடர்பில் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜெனீவா சர்வதேச பௌத்த மையத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர், மடவல சீலவிமல தேரர், தவலம தம்மிக்க தேரர் மற்றும் ஹல்விடிகல சுஜாத தேரர் ஆகியோரைச் சந்தித்தும் கலந்துரையாடினார்.

இலங்கையின் பௌத்த பாரம்பரியம் மற்றும் அதன் உலகளாவிய தொடர்புகள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இது ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பு என்று அமைச்சர் கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version