Home இலங்கை அரசியல் ஜனாதிபதிக்கு கடனுமில்லை பயமுமில்லை: பசில்

ஜனாதிபதிக்கு கடனுமில்லை பயமுமில்லை: பசில்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தாம் பயமுமில்லை கடனுமில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

 

நாட்டை பாதுகாக்கக்கூடிய ஆற்றல்

கட்சியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் கட்சியை விலகிய போதிலும் ஏனைய உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

நெருக்கடியான தருணத்தில் நாட்டை பாதுகாக்கக்கூடிய ஆற்றல் ஜனாதிபதியிடம் இருந்த காரணத்தினால் கட்சி இவ்வாறு ஆதரவினை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று வரையில் இந்த ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும், நாட்டுக்காக தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/we-are-not-afraid-of-ranil-1720319183

NO COMMENTS

Exit mobile version