Home உலகம் டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதா ஈரான்..!

டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதா ஈரான்..!

0

அமெரிக்க(us) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை(Donald Trump) படுகொலை செய்ய தாம் ஒருபோதும் சதி செய்யவில்லை என்றும், அமெரிக்காவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும் ஈரான்(iran) ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று ஒளிபரப்பப்பட்ட அமெரிக்க ஊடகமான NBC நியூஸுக்கு அளித்த பேட்டியில்,அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். அதற்கு முன்பு, ஜனாதிபதி பிரச்சார பேரணியின் போது டிரம்பை சுட முயற்சி நடந்தது.

பிரசார பேரணியின்போது கொலை முயற்சி

கடந்த ஜூலை மாதம், பென்சில்வேனியாவின் பட்லரில் வெளிப்புற மேடையில் பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ​​டிரம்ப் சுடப்பட்டார், இதன்போது அவர் காதில் காயமடைந்தார். உடனடியாக பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்து, டிரம்பை சுட்ட நபரை சுட்டுக் கொன்றனர்.

இந்தசதித்திட்டங்களுக்குப் பின்னால் ஈரான் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

டிரம்ப் படுகொலை சதியில் சந்தேக நபர்களாக ஈரானிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய பல ஈரானியர்களை FBI அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, ஈரானிய மிதவாத ஜனாதிபதி மசூத் பெசெகியான், டொனால்ட் டிரம்பை படுகொலை செய்யும் சதியில் ஈரானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், டிரம்பை படுகொலை செய்யும் விருப்பம் ஈரானுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

 காசிம் சுலைமானியை படுகொலை செய்ய உத்தரவிட்ட ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் முதல் முறையாகப் பதவி வகித்தபோது, ​​ஈரானிய புரட்சிகர காவல்படையின் துணை இராணுவப் பிரிவாகக் கருதப்படும் குட்ஸ் படையின் தலைவரான ஜெனரல் காசிம் சுலைமானியை படுகொலை செய்ய உத்தரவிட்டார். சுலைமானியின் கொலையுடன், ஈரானிய புரட்சிகர காவல்படை டிரம்பைப் பழிவாங்குவதாக சபதம் செய்தது.

எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்ற பிறகு, ஈரானுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுப்பதில் டிரம்ப் இஸ்ரேலுடன் சேர்ந்து கொள்வார் என்று ஈரான் அஞ்சுகிறது. இதனால்தான் ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவுடன் ஒத்துழைக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version